districts

img

புதிய சங்கம் உதயம்

சேலம், நவ.20- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சங் கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் கீழ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் சங்கம் புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன், மாநிலப் பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டத் தலைவர் சரிதா செல்வி தலைமையில் நடைபெற் றது. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ந.திருவரங்கன் மற்றும் சங்ககிரி வட்டார இயக்க மேலாளர் சீனிவாசன் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக, சேலம்  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன் வாழ்த்தி பேசினார்.  மாநிலப் பொதுக்குழுவில், புதிய ஒருங்கிணைப்பு குழு ஏற் படுத்தப்பட்டது. இதில் டி.சீனிவாசன் (திருவள்ளூர்), பி.கலை வாணி (காஞ்சிபுரம்), நீலாமணி (ஈரோடு), சீனிவாசன் (சேலம்)  ஆகியோர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக செயல் படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.