districts

img

யானை தந்தம் விற்க முயற்சி – 6 பேர் கைது!

கோவை, மே 31- கோவையில் யானை தந்தம் விற்க முயற்சித்த  பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்த னர். கோவை வனச்சரக எல்லையில் சில நபர் கள் நான்கு சக்கர வாகனத்தில் சட்ட விரோத மாக யானை தந்தம் விற்பனை செய்ய போவ தாக ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவ லின் பேரில், கோவை மாவட்ட வன அலுவ லர் உத்தரவின்படி கோவை மற்றும் மதுக் கரை என இரு குழுக்கள் அமைக்கப்பட்டு, சந்தேகிக்கப்பட்ட வாகனத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பின்னர், அவர் களை கைது செய்து விசாரித்ததில் சட்ட  விரோதமாக யானை தந்தம் விற்பனை செய்ய முற்பட்டது தெரிய வந்தது. மேலும்  அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த சர்வேஷ்  பாபு, கூடலூரைச் சேர்ந்த சங்கீதா, இடை யர்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ், வெள்ளலூரைச் சேர்ந்த லோகநாதன், நாகமாநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த  அருள் ஆரோக்கியம் மற்றும் பாலமுருகன் ஆகியோரை கைது செய்து குற்றவியல்  நீதிமன்ற நடுவர் எண் 5இல் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தனிக்குழு அமைக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

;