districts

img

நூறுநாள் வேலை திட்டத்தில் குளறுபடி

கோவை, ஆக. 12- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள  குளறுபடிகளை கண்டித்து, அன் னூரில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண் டும். தினக்கூலி ரூ.600 ஆக உயர்த்த  வேண்டும். மனு கொடுத்த 15 நாட்க ளுக்குள் வேலை வழங்க வேண் டும். விலைவாசி உயர்வை கட்டுப்ப டுத்த வேண்டும். விவசாயத்திற்குத்  தேவையான உரங்கள் தட்டுப்பா டின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுக்கழிப்பிடம், சாக்கடை சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். பட்டா மனு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  அன்னூர் பயணியர் மாளிகை  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விதொச மாவட்ட துணைச் செயலாளர் மகேந்திரன் தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செயலா ளர் செல்வராஜ், மாவட்டத் தலை வர் ரவிக்குமார். சிபிஎம் அன்னூர் ஒன்றிய குழுச் செயலாளர் மணி கண்டன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அர்ஜுன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். சேலம் இதேகோரிக்கைகளை வலியு றுத்தி, சேலம் மாவட்டம் சங்ககிரி,  கொங்கணாபுரம், பனமரத்துப் பட்டி, தலைவாசல், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ் கே சேகர், மாவட்டத் தலை வர் ஜி கணபதி, நிர்வாகிகள் எம். சின் ராஜ், சி.எஸ். பழனியப்பன், வி. தங்கவேலு, ஜெயக்கொடி, வி.மாரி யப்பன் உள்ளிட்டு எண்ணற்றோர் பங்கேற்றனர்.