ஓசூர், செப்.10- ஓசூரில், தமிழ்நாடு விண்வெளித் தொழில் வளர்ச்சி சங்கம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் மற்றும் ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா) ஆகியவை இணைந்து விண்வெளி மற்றும் பாது காப்பு மாநாட்டினை ஓசூ ரில் நடத்தின. ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, கூடுதல் தலைமை செயல ரும், தமிழ்நாடுதொழில் முதலீட்டு கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு னருமான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கி னார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விண்வெளித் தொழில் வளர்ச்சி சங்க தலைவர்கள் எஸ். கிறிஸ்டோபர், ராமச் சந்திரன், ஓசூர் ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன், டிட்கோ திட்ட இயக்குநர் விநாயகம், டி. இ.ஏ.எல்.நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர், ஏ.இ.பி.எல்.நிர்வாக இயக்கு னர் சுந்தரம் ஆகியோர் பேசி னார்கள். முடிவில், பிராங் க்ளின் நன்றி கூறினார்.