கிருஷ்ணகிரி,டிச.26- கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அரையாண்டு தேர்வு நடந்த நிலை யில் பெரும்பாலான மாணவர்கள் காய்ச்சலால் பாதித்து வருகின்றனர். கிராமப்புற பகுதிகளில் இந்த பாதிப்பு அதிக அளவில் இருந்து வரு கிறது. ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி பரிசோதனை நடத்தி உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோரும், பொதுமக்களும் வலி யுறுத்தி வருகின்றனர். இது குறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,“ இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் தெரி விக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கலந்து ஆலோசனை நடத்தி மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்”என்றன.