districts

கஞ்சா விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி, டிச. 17- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா  விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பகலவனுக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து காவல் துறையினர் அந்தப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னை சத்யா தெருவில் மணிகண்டன் (22) மற்றும் ஒரு சிறுவன் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.  இதையடுத்துவழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மணி கண்டனை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.