districts

img

முள்ளிப்பாடி, பாலவிடுதி, செம்பியாநத்தம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

கரூர், அக்.5 - கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட முள்ளிப்பாடி, பாலவிடுதி, செம்பி யாநத்தம் ஆகிய ஊராட்சிகளில் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
முள்ளிப்பாடி ஊராட்சி
முள்ளிப்பாடி ஊராட்சி கிராம சபை கூட்டம் சேர்வைக்காரன்பட்டியில் நடைபெற்றது. கூட்டத் திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நீலாவேல்முரு கன் தலைமை வகித்தார்.  முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள கிராம  மக்கள், குடிநீருக்காக காவிரி கூட்டு குடிநீரை  மட்டுமே நம்பி உள்ளனர். இந்த குடிநீர் வழங்கும் குழாய்கள் அனைத்தும் பிவிசி குழாய்கள் மூலம்  விநியோகம் செய்யப்படுவதால் அடிக்கடி பிவிசி  குழாய்கள் உடைந்து, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே,  இந்த பிவிசி குழாய்களை, இரும்பு குழாயாக  மாற்றி ஊராட்சியில் அனைத்து கிராமங்களுக் கும் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி 30  ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், அவை பழுதாகி பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல், இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. புதிய நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்கள் அனைவருக்கும் நூறு நாள் கிடைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாலவிடுதி ஊராட்சி
பாலவிடுதி ஊராட்சி மன்றத்தில் கிராம சபை  கூட்டம் தூளிப்பட்டியில் நடைபெற்றது. கூட்டத் திற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ராஜேந்தி ரன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சி. சரோஜா, ஒன்றிய பற்றாளர் செந்தில், பால விடுதி கிராம அலுவலர் சுரேஷ், ஊராட்சி செயலர்  சுந்தர்ராஜன் கலந்து கொண்டனர். பாலவிடுதி ஊராட்சிக்குட்பட்ட கிராமங் களை குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற்ற  ஊராட்சியாக கொண்டு வருவது, ஊராட்சியில்  குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திடும்  வகையில் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக் கும் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திட விவாதிக்கப்பட்டது. பெண் கல்வி யின் முக்கியத்துவம் குறித்து பேசினர். நூறு  நாள் வேலையை அனைவருக்கும் வழங்கிட நட வடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களுக்கு தேவையான சாலை, தெருவிளக்கு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
செம்பியநத்தம் ஊராட்சி
செம்பியநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நல்லூ ரான்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி வளா கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற  தலைவர் மகேஸ்வரி அறிவழகன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் லோகநாதன், ஊராட்சி செயலர் முருகன் கலந்து கொண்டனர். மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தெரு விளக்கு, சாலை,  குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பிரச்சனை களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நிறை வேற்றப்படும். ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவது தமது கடமை என  ஊராட்சி மன்ற தலைவர் பேசினார். மேலும் ஊராட்சி முழுவதும் நூறு நாள் வேலை திட்டத்தில்  தொடர்ந்து பணி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.