கரூர், டிச.5- கரூர் மாவட்டம் குளித்தலை, பெட்டவாய்தலை, தோகைமலை, கடவூர், தரகம்பட்டி பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சீட்ஸ் நிறுவனத்தை 10 பேர் கொண்ட குழுவினர் நடத்தி வந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த இவர்கள் இயக்குனர்களாகவும், மேலாளர் மற்றும் உரிமையாளர்களாகவும் உள்ளனர். கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் 50 ஆயிரம் முதல் 50 லட்சம் வரை ஏலச் சீட்டு நிறுவனம் நடத்துவ தாக கூறி நாள்தோறும், வாரம்தோ றும், மாதம் தோறும் என பல நிலை களில் பணம் வசூல் செய்துள்ள னர். கடந்த ஒரு வருடமாக வசூ லித்து வந்த பணத்தை, பொது மக்களுக்கு திருப்பி கொடுக்கா மல் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துவிட்டு. தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு தலைமறை வாகி விட்டனர்.
திட்டமிட்டு பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையா ளர் வினோத் உள்ளிட்ட அனை வரையும் உடனடியாக கைது செய்யக்கோரியும், குற்றவாளி களை கைது செய்யாமல் குற்றவா ளிகளுக்கு ஆதரவாக செயல் படும் கரூர் மாவட்ட காவல் துறை, கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றி யக் குழு சார்பில் குளித்தலை காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு சிறப்பு ரையில் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்களிடம் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய நிறுவ னத்தின் உரிமையாளர் வினோ த்தை உடனடியாக கைது செய்ய கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கரூர் மாவட்டத்தில் எத்த னை ஏலச்சீட்டு நடத்தும் நிறுவ னங்களை வரையறை செய்ய வேண்டும். போலியான நிதி நிறுவ னங்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். பாதிக் கப்பட்ட மக்களுக்கு அவர்களது சேமிப்பு பணத்தை மீட்டுக் கொ டுக்க கரூர் மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்ட ஆட்சியர் குற்றவாளி களை கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண் டும். ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா மல் குற்றவாளிகளை பாதுகாக் கும் நோக்கில் மாவட்ட நிர்வா கம் அலட்சியமாக இருந்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிச, 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை யிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் பி.ராஜூ, கே.சக்திவேல், தோகைமலை ஒன்றிய செயலா ளர் ஏ.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.