கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் புதனன்று மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் முன்னிலையிலும் மாவட்ட அளவிலான சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டயுதாபாணி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) சந்திரசேகர் மற்றும் சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.