districts

கடலூரில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை போக்க சிபிஎம் கோரிக்கை

கடலூர், அக்.4- கடலூர் மாவட்டத்தில் உர தட்டுப்பாட்டை போக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் தியுள்ளது. இதுகுறித்து கட்சியின்  மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது: மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,40,000 ஹெக்ட்ட ரில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா, உரம், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடுபொருட்கள் வேளாண் விரிவாக்க மையங்களில், கூட்டுறவு சொசைட்டிகளில் கிடைக் காத சூழ்நிலையில் விவசா யிகள், விவசாயம் செய்ய ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. தனியார் உரக்கடை களில் போலியான உரங் களை விற்கும் நிலை உள்  ளது. உரம், யூரியா உள்ளிட்ட  இடுபொருளை எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. 266 ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு மூட்டை யூரியா 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உரம், யூரியா உள்ளிட்ட இடுபொரு களுக்கும் பில், ரசீதும் ஏதும் வழங்கப்படுவதில்லை. கடலூர் மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள யூரியா உரத்தட்டுப்பட்டை போக்க போர்க்கால அடிப் படையில் மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் விலைக் கும், போலி ரகங்களை விற்கும் தனியார் நிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;