சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவ, மாணவிகள் கைப்பந்து, தடகளம், கால்பந்து, எறிபந்து, குண்டு எறிதல், பூ பந்து, இறகு பந்து, கோ-கோ ஆகிய பல போட்டிகளில் வென்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் பிரபாகர், ஆசிரியர்களை பள்ளியின் தாளாளர் எஸ்.குமார், முதல்வர் ரூபியாள்ராணி, துணை முதல்வர் அறிவழகன் ஆகியோர் பாராட்டினர்.