districts

நீலகிரி மாவட்டத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக

உதகை, பிப்.24-

நீலகிரி மாவட்டத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வலியுறுத்தி தொடர் இயக்கங்கள் நடத்திடவுள்ள தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்ட மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரமாக தேயிலை தொழில் உள்ளது. தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.30 நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென நீண்ட காலமாக சிறு, குறு விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால், மத்திய, மாநில அரசுகள் இவ்விசயத்தில் உரிய தலையிடு செய்ய தயாராக இல்லை. எனவே, தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.30 நிர்ணயம் செய்திட வேண்டும்.  

சுற்றுலா தொழிலை மேம்படுத்துதல்

நீலகிரி மாவட்டத்திற்கு வருடம் முழுவதும் லட்சகணக் கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றன. ஆனால் சுற் றுலா பயணிக்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் சுற்றுலாத்தலங்களில் இல்லை என்பதோடு, வருகை தரும் சுற்றுலா பயணிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலை யுமே தற்போது உள்ளது. குறிப்பாக, பசுமை வரி என்னும் பெயரால் சுற்றுலா வாகனங்களுக்கு மிக அதிகமான தொகை வசூலிக்கப்படுகிறது. இத்தகைய நடைமுறையை கைவிட வேண்டும். உதகை, குன்னூர், பைகாரா,முதுமலை ஆகிய பதிகளில் உள்ள ஒரு சில சுற்றுலாத்தலங்களை தவிர இதர பகுதிக ளான மசினகுடி, சிங்காரா, மரவகண்டி,கிளன்மார்கன், மேல்பவானி, எமரால்டு, கெத்தை உள்ளிட்ட பல இடங்க ளில் புதிய சுற்றுலா தலங்களை உருவாக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் மாற்று முயற்சிகளை எடுக்க வேண்டும்.  

இருளில் கூடலூர் பகுதி மக்கள்

கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே, மின் இணைப்பில்லாத அனைவருக்கும் மின்சார இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் பிப்.26 ஆம் தேதியன்று மாவட் டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் கோரிக்கை முழக்கம் இயக்கம் நடைபெறும். இதைத்தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதியன்று மக்கள் கோரிக்கை மாநாடு நடத்தப்படவுள்ளது. மாவட்ட மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இவ்வியக்கங்க ளுக்கு பொதுமக்கள் பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக் குழுவின் சார்பில் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.