districts

img

காத்திருப்புப் போராட்டம்: ஈரோட்டில் வெற்றிகரமாக்க தயாரிப்புக் கூட்டம்

ஈரோடு, டிச. 12- மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியு றுத்தி திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெ றும் காத்திருப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவது தொடர்பாக தயாரிப்புக் கூட்டம் நடைபெற்றது. டிச.14 ஆம் தேதியன்று விவசாயிக ளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் போராட் டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத் துவது குறித்த தயாரிப்புக் கூட்டம் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஆர்.ரகுராமன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர்  திருநாவுக்கரசு, திமுக ஈரோடு மாநகரச் செயலாளர் சுப்பிர மணி, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பாஸ்கரராஜ், விசிக நிர்வாகி ஜாபர், எஸ்டிபிஐ அப்துல் ரகுமான், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகி சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெறும் தொடர் காத்திருப்புப் போராட் டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் உட்பட திரளானோரை பங்கேற்கச் செய்து போராட்டத்தை வெற்றிகமாக் குவது என முடிவு செய்யப்பட்டது.

;