இராமநாதபுரம், ஜூன் 17- இராமநாதபுரம் மாவட்டத்தின் 26-ஆவது மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் வெள்ளியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். குடிநீர் திட்டங்கள், மீன் வளத் துறை திட்டங்கள், ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான திட்டங்கள், முன்னேற விளையும் மாவட்ட திட்டங்கள் ஆகிய வற்றிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். மாற்றுத்திறனா ளிகள் துறை சார்ந்த திட்டங்கள் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் 94441-83000 என்ற எண்ணில் எந்நேரமும் என்னை தொடர்பு கொண்டு தங்க ளது குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.