அரியலூர், ஏப்.10- அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காமரசவல்லி சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மோகன்ராஜ் (20). இவர் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் ஹோம் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் காமரசவல்லி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன்ராஜ் சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையறிந்த மோகன்ராஜின் தந்தை முருகேசன், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகா ரின் பேரில் காவல்துறையினர் மோகன் ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த மோகன்ராஜின் தந்தை முரு கேசனை தேடி வருகின்றனர்.