court

img

புதுவையில் ஆதார் விவரத்தை திருடிய பாஜக... ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி....

சென்னை:
புகாருக்குள்ளாகும் கட்சி மத்தியில் ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்ணைப் பெற்று பாஜக தேர்தல் பரப்புரை செய்வதாகசென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கின் விசாரணை புதனன்று (மார்ச்24) தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது இதை விசாரித்த உயர்நீதிமன்றம், வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாஜக உள்ளிட்ட அர
சியல் கட்சிகள் பெற்றது எப்படி? புகாருக்குள்ளாகும் கட்சிமத்தியில் ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா? என சரமாரி கேள்விகளை எழுப்பியது.

இதுதொடர்பாக ஒரே நாள் அவகாசத்தில் (மார்ச் 26) புதுச்சேரி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்எனவும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வாதி தரப்பில் வழக்கறிஞர் சுமதி,அருண் ஆகியோர் ஆஜராகினர். 
வழக்கு குறித்த விவரம் வருமாறு:-மார்ச் மாதம் 4 ஆம் தேதி அன்று புதுச்சேரி வாக்காளர்களுக்கு பாஜக தரப்பில் ஒரு வாட்ஸ் ஆப் குறுந் தகவல் ஒன்று வந்தது. அதில், “வாருங்கள் பாஜகவில் இணையுங்கள்! பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்! புதுவையில் நல்லாட்சி அமைப்போம்! என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜகவினர் அனுப்பிய லிங்க் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்துக்கும் வந்தது. அதை அவர், கிளிக் செய்தபோது அவரது பெயர்இடம் பெற்றுள்ள லாஸ்பேட்டை தொகுதி, வாக்களிக்கும்வாக்குச்சாவடி எண் 11/12 உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிவித்து அத்துடன் இணைக்கிறது. அதில்‘மலரட்டும் தாமரை! ஒளிரட்டும் புதுச்சேரி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த லிங்க் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் உள்ளிட்ட புதுவையின் அனைத்துப் பகுதி வாக்குச்சாவடிகளிலும் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் “அநியாயம் அநியாயம், ஏழையின் வயிற்றில் அடித்ததுஅநியாயம்; காங்கிரஸ் - திமுக குடும்ப ஆட்சியால் புதுச்சேரியே குட்டிச்சுவரானது; மாறும் மாறும் இந்த நிலை நிச்சயம் மாறும். மத்தியில் மோடி ஆட்சி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அதுவே புதுச்சேரிக்கு மறுமலர்ச்சி” என்கிறது.இந்த தகவல் ஆனந்த் ஒருவருக்கு மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் என்று பல்வேறு கட்சிகளில் உள்ளவர்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் வந்துள்ளது. இந்த தகவல்அனைத்தும் ஆதார் அட்டை எண் லிங்க் செய்யப்பட்ட அனைவரது செல்போன்களுக்கும் சென்றுள்ளது.

குறிப்பாக, ஆதார் இணைக்கப்படாத ஆனந்த் வைத்திருக்கும் மற்றொரு செல்பேசி எண், அவரது குடும்பத்தினர் வைத்துள்ள செல்போன்களுக்கு பாஜகவினர் குறுந்தகவல் செல்லவில்லை. குறுந்தகவல் அனுப்பிய வாட்ஸ் ஆப் குரூப் அட்மினை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, முறையான பதில் கிடைக்கவில்லை, குறுந்தகவல் அனுப்பிய வாட்ஸ் ஆப் குரூப் அட்மினை செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது நீங்கள் பாஜகஉறுப்பினராக இருப்பீர்கள் அல்லது ஏதாவது ஒரு வகையில் நீங்கள் தொடர்பில் இருப்பீர்கள், இந்த தகவல் உங்களுக்கு மட்டுமல்ல 1500 வாக்குச்சாவடிகளில் உள்ளவர்களுக்கும் அனுப்பியிருக்கிறோம் என்று  முன்னுக்குப் பின் முரணாக கூறியுள்ளார். 

இதனையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில், தனி நபர் தகவல் திருடப்பட்டது எப்படி, குறிப்பாக ஆதார் லிங்க் செய்யப்பட்ட செல்பேசி எண்களுக்கு மட்டுமே குறுந் தகவல் அனுப்பி உள்ளனர். ஆதார் தகவல் கசிந்தது எப்படி? இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்படி ஒரு மோசடி நடந்திருப்பது குறித்து மறுதினமே, புதுச்சேரி தேர்தல் ஆணையம், காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று இந்தியஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைம் குற்றப்பிரிவும் இது குறித்து விசாரணை செய்துள்ளது. 

அரசின் திட்டங்களை பெற ஆதார் அவசியம் என்றும் அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், வங்கிக் கணக்குகள் துவங்க, சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும், பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அட்டை அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. அதேபோல் சிம் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை பெற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே,செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் களின் விவரங்களை சரிபார்க்க ஆதாரை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஆதார் எண் லிங்க் செய்யப்பட்ட செல்பேசிஎண்களை பாஜக திருடிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

;