court

img

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் நேரடி விசாரணை....

புதுதில்லி:
17 மாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதால் நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால்  விசாரணையை நேரடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்தது. இதனைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு, முதல்கட்டமாக குறிப்பிட்ட சில வழக்குகளை மட்டும் நேரடியாக விசாரிக்கலாம் என்று பரிந்துரை வழங்கியுள்ளது.  இதைத்தொடர்ந்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்துள்ளார். அதேநேரம் காணொலி மூலம் விசாரணையில் பங்கேற்க விரும்பும் வழக்கறிஞர்களும் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டு, இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

;