court

img

தாஜ்மகாலை யார் கட்டினார்கள் என்று கண்டுபிடிப்பதுதான் நீதிமன்றத்தின் வேலையா?

புதுதில்லி, டிச. 6 -  தாஜ்மஹாலை ஷாஜஹான்தான் கட்டினாரா? என்பதை உறுதிப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந் துள்ள தாஜ்மஹால் உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டடம், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 17-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசர் ஷாஜகான், தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக இந்த கட்டடத்தை கட்டினார் என்பது வரலாறு. இந்நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “17-ஆம் நூற்றாண்டில் ஷாஜஹான் தாஜ்மஹாலை கட்டிய தாக நாம் பள்ளி பாடப் புத்தகங்களில் கற்பிக்கிறோம். ஆனால், நாம் கற்பிப் பது உண்மைதானா? என்பதை உறுதிப் படுத்துவது முக்கியம். ஷாஜஹான் தாஜ் மஹாலை கட்டுவதற்கு முன், அங்கு அதுபோன்ற கட்டடம் இருந்ததா, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அந்தக் கட்டடத்தின் உண் மையான வயதையும், உண்மையான வரலாற்றையும் உறுதிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா, சி.டி. ரவிகுமார் அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அனைத்திற்கும் நீதிமன்றத்தை இழுக்காதீர்கள். 400 வருடங்களுக்கு முந்தைய அந்தக் கட்ட டத்தின் உண்மையான வயதையும் வர லாற்றையும் நீதிமன்றத்தால் உறுதிப் படுத்த முடியுமா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “நீங்கள் உங்கள் மனுவில், ‘தவறான தகவல்களை களையுங்கள்’ என குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், எது உண்மையான தகவல் என்பதை  யார் உறுதிப்படுத்துவது? யார் தீர்மா னிப்பது? இதுதான் நீதிமன்றத்தின் வேலையா?” என்றும் காட்டமாக சாடினர். இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் கருத்தை ஏற்பதாகவும், மனுவை திரும் பப் பெற்றுக்கொள்வதாகவும் தெரி வித்தார். மேலும், மனுதாரர் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை அணுகுவார் என்றும் அவர் கூறினார். இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

;