court

img

தேர்தல் ஆணையர் பதவிக்காலத்தை சுருக்குவது சட்டத்தை மீறுவதாகும்!

புதுதில்லி, நவ. 24 - 6 ஆண்டுகள் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யக் கூடியவரையே தேர்தல் ஆணையராக நியமிக்க வே ண்டும் என்றும்; அவ்வாறு செய்யா மல் இருப்பது, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல்  ஆணையர்கள் (சேவை நிபந்தனை கள்) சட்டம், 1991-இன் பிரிவு 6ஐ  மீறுவதாகும் என்று உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நிய மனத்திற்கு ‘கொலீஜியம்’ போன்ற சுதந்திரமான அமைப்பு வேண்டும் என்று தொடரப்பட்டிருந்த வழக்கை கே.எம். ஜோசப் தலைமையில் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும்  சிடி ரவிக்குமார் ஆகிய 5 நீதிபதி கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.  செவ்வாயன்று நடைபெற்ற விசாரணையின்போது, “இன்றைய இந்திய தேர்தல் ஆணையம் சுதந் திரமாக செயல்படுவதாக ஒன்றிய அரசு வாய்மொழியாக மட்டுமே கூறி  வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை பார்த்தால் அப்படி தெரியவில்லை. 18 ஆண்டுகளில் 14 தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஒருவர் கூட 6 ஆண்டு  முழு பதவிக்காலமும் இருந்த தில்லை. இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல” என்று நீதிபதி கே.எம். ஜோசப் காட்டமாக கூறினார்.

‘தலை ஆட்டுபவராக இருக்கக்கூடாது’

தொடர்ந்து புதன்கிழமை யன்றும் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “தேர்தல் ஆணை யத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள் வது அவசியம் என்று சட்ட ஆணை யம் மற்றும் பல்வேறு குழுக் களின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டில் அர சியல் தலையீடு இருக்கக்கூடாது. நன்னடத்தையுடன் சுதந்திரமாக செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் இருக்க வேண்டியது முக்கியம். ஒருவேளை நாட்டின் பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டு கள் எழுந்து, அதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்காமல் போனால், அது ஒட்டுமொத்த நடைமுறையும் செயலிழந்ததற்கு ஒப்பாகும். தலை மைத் தேர்தல் ஆணையராக நிய மிக்கப்படுபவர், பிரதமர் மீது கடு மையான குற்றச்சாட்டுகள் கூறப் பட்டாலும் சுதந்திரமாக பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுப்பவராக இருக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் ‘தலை ஆட்டு பவராக இருக்கக் கூடாது’” என்று  கூறியதுடன், “தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அருண் கோயல் தேர்தல் ஆணை யராக நியமிக்கப்பட்டது எப்படி?” என்று கேள்வி எழுப்பியது. அது தொடர்பான ஆவணங்களை வியாழக் கிழமை தாக்கல் செய்யவும் ஒன்றிய  அரசுக்கு உத்தரவிட்டது.

அருண் கோயல்... ஆவணங்கள் தாக்கல்

அதன்படி வியாழனன்று அருண்  கோயல் நியமனம் தொடர்பான ஆவ ணங்களை ஒன்றிய அரசு உச்ச  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இன்றைய வழக்கு விசாரணையின் போதும் அரசுத் தரப்பு வழக்கறி ஞரிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி யாக கேள்விகளை எழுப்பியது.  விசாரணை துவங்கியதும் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக் கறிஞர் கோபால் சங்கரநாரா யணன் ஆஜராகி வாதாடினார். அவர், “இன்று வரை தேர்தல் ஆணைய ராக 6 ஆண்டு பதவிக்காலம் பெற்ற  யாரையும் ஒன்றிய அரசு நிய மிக்கவில்லை என்று தெரிவித்தார். “இது, மனுதாரர்களின் கூற்றுப்படி, தேர்தல் ஆணையத்தை கட்டுக்குள்  வைத்திருப்பதோடு, நிறுவனத்தின் சுதந்திரத்தையும் பாதிக்கிறது” என்றார். மேலும், “அரசியலமைப்புச் சட்டம் 6 ஆண்டு பதவிக்காலம் என  நிர்ணயித்தது, பணிப் பாது காப்பிற்காகவே. ஆனால், ஒன்றிய அரசு ஒருவரை 6 மாதங்களுக்கு மட்டுமே நியமிக்கிறது என்றால், அவரின் கீழ் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக, பாதுகாப்பாக இருக்கும் என்று எங்களுக்கு தோன்றவில்லை. தேர்தல் ஆணை யம் இன்று அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக மாறிவிட்டது. எனவே, தன்னிச்சையாக அல்லாமல் வெளிப்படையான மற்றும் தெளிவான செயல்முறை மூலம் தேர்தல் ஆணையர்கள் நிய மனம் நடைபெறுவதற்கான அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்றும் வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது, தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு ஏற்கெனவே செயல்முறைகள் உள்ளதுடன், இதில் தலையிடுவதற்கான அவசியம் இல்லாத நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்று அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி குறிப்பிட்டார். அத்துடன், “ஒருவர்  65 வயது (உச்ச வரம்பு) அடைந்த  பிறகும், பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதற்காக அவர்  பணியை தொடர முடியுமா? என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாரா யணனிடம் குறுக்கு கேள்வி எழுப்பி னார்.

4 பெயர்களுமே பொருத்தமில்லாதவை

அப்போது நீதிபதி கே.எம். ஜோசப், தேர்தல் ஆணையர் பதவி க்கு பரிந்துரைக்கப்பட்ட 4 பெயர் களில் கூட-  6 ஆண்டுகள் பதவி வகிக்க முடியாத நபர்களின் பெயர் களையே அரசு தேர்வு செய்துள் ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். “நீங்கள் 6 ஆண்டு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யக்கூடிய நபர்களை தேர்தல் ஆணையர்களாக தேர்ந் தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம், 1991-இன் பிரிவு 6ஐ மீறுவதாகும்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக 6 பக்கங்களுக்கு மிகாமல் சுருக்கமான குறிப்புகளை 5 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கும், மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது.

;