court

img

ஞானவாபி மசூதியில் தடயவியல் பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் தடை

உத்தரப்பிரதேசத்தில் ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு.


உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதி 16 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஒளரங்கசீப் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துக் கட்டப்பட்டது எனவும் அந்த மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகவும் அது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி இந்து மதத்தைச் சேர்ந்த 4 பேர் வாரணாசி மாவட்ட ந்தீமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


அதன்பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மேல்முறையீடு செய்தநிலையில் கடந்த 12 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தது அதில் ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.


இந்த உத்தரவுக்கு எதிராக ஞானவாபி மசூதி நிர்வாக குழு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஞானவாவி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் அல்லது நீரூற்று போன்ற வடிவத்தை அறிவியல் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது உத்தரவு. 

;