court

img

குற்றவாளி யுவராஜுக்கு வாழ்நாள் சிறை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை, ஜூன் 2- ஓமலூர் கோகுல்ராஜ் கொலை வழக் கில் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை யை உறுதி செய்து சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரி வித்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு, மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத் தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல், வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாய் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கள், வழக்கின் முக்கிய சாட்சி யான கோகுல்ராஜுடன் படித்த மாணவி தோழியை நீதிமன்றத்துக்கு வர வழைத்து விசாரித்தனர். அப்போது அவர் பிறழ் சாட்சி அளித்ததாக நீதி மன்ற அவமதிப்பு வழக்கும் விசார ணைக்கு எடுக்கப்பட்டது. இந்நிலையில், யுவராஜ் உள்ளிட் டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாக வாதிட்டார். இதனிடையே கோகுல்ராஜ் கடைசி யாக உயிருடன் காணப்பட்ட திருச்செங் கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெ டுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறை வடைந்த நிலையில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த  வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) தீர்ப்பளித்தது.

யுவராஜு-க்கு வாழ்நாள் சிறை

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு, யுவராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ள தாகவும், ஏற்கனவே வழங்கிய சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனவும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை ஊடகங்கள் பரபரப்பா க்கக் கூடாது. பொறுப்புடன் செயல்பட வேண்டும், கருத்து சுதந்திரத்தின் கட்டுப்பாடு குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யுவராஜ் ஊடகங்களை சாதக மாக பயன்படுத்தியுள்ளார். அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என பேட்டி யளித்துள்ளார். இதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்த நீதி மன்றம், யுவராஜ் மீதான தண்டனை யை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும் 10 பேரின் ஆயுள் தண்டனை யையும் உறுதி செய்தது. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதேபோல் வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயார் சித்ரா மேல்முறையீடு செய்திருந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஎம் வரவேற்பு 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. சாதி ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சேலம் மாவட்டம், ஓமலூர் பொறியியல் கல்லூரி பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்த தற்காக கொடூரமான முறையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்ததுடன், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கிட வேண்டுமென குரலெழுப்பினர்.  இந்த கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட யுவராஜூம் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று பின்னர் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு யுவராஜூக்கும் அவரது கார் ஓட்டுநருக்கும் சாகும் வரை 3 ஆயுள் சிறை தண்டனையும், எஞ்சிய 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவிற்கு எதிராக யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவினை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாட்சிகளை தீர விசாரித்ததுடன், குற்றம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பிறகு ஜூன் 2 அன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததுடன், மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வரவேற்கிறது. இவ்வழக்கில் ஆஜராகி சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இத்தீர்ப்பு சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் சாதிவெறியர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என நம்புகிறோம். சாதி மறுப்பு திருமணம்  மற்றும் காதல் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு  ஏற்பாடு இல்லாத காரணத்தினால் அடிக்கடி சாதி ஆணவப் படுகொலைகள்  நிகழ்கின்றன. சமீபத்தில் கூட கிருஷ்ணகிரியில் சாதி ஆணவப் படுகொலை நடந்தது. நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற படுகொலைகள் நடப்பது ஏற்புடையதல்ல. எனவே, தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;