மதத்தின் அடிப்படையில் மாணவர் தண்டிக்கப்படுவது என்பது சரியான கல்வி முறை அல்ல என்று கூறிய உச்ச நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சக மாணவர்களை வைத்து முஸ்லீம் மாணவரை அடிக்க சொன்ன ஆசிரியர் விவகாரம் தொடர்பான பொதுநல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அம்மாநில காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கால தாமதம் செய்ததும், மத அடிப்படையிலான குற்றச்சாட்டை தவிர்த்தும் அம்பலமானது.
இந்த நிலையில், மதத்தின் அடிப்படையில் மாணவர் தண்டிக்கப்படுவது என்பது சரியான கல்வி முறை அல்ல என்று கூறிய உச்ச நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கை மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மூலம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.