court

img

தலித் முஸ்லிம்களுக்கும் ‘எஸ்.சி.’ அந்தஸ்து; உச்சநீதிமன்றத்தில் ஜமியத் உலாமா கோரிக்கை!

புதுதில்லி, டிச. 2- தலித் முஸ்லிம்களை பட்டியல் வகுப்பினராக வகைப்படுத்தி அவர் களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகை களை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த மனுவில் ஜமியத் உலாமா-இ-ஹிந்த் மேலும் கூறியிருப்பதாவது: முஸ்லிம் மதம் சமத்துவக் கொள்கை அடிப்படையிலானது. இதில்  சாதிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட, சாதிப் பிரிவுகள் இருக்கவே செய்கின்றன. முஸ்லிம் மதம் சாதிப்  பிரிவுகள் இல்லாதது என்ற அடிப்படை யில், 1950-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவில், தலித் முஸ்லிம்கள் எஸ்.சி. (Scheduled Caste) பிரிவில் சேர்க்கப்படவில்லை. முஸ்லிம் மதத்தில் பின்தங்கிய வகுப்பினர்

சாதி அடிப்படையில், இதர  பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர். இந்து, சீக்கியம், புத்த மதத்தில் உள்ள தலித்துக்கள் எல்லாம் எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகைகளை அனுபவிக்கும் போது, அதே உரிமை தலித் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த பாகுபாடு, அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவை மீறுவதாகும். தலித் முஸ்லிம்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து மறுக்கப்படுவதால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், அவர்களால் இதர மதங்களில் உள்ள எஸ்.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சலுகைகளை பெறமுடியவில்லை. இது வரலாற்று தவறு. இதனால் முஸ் லிம்கள் மற்றும் இதர மதத்தினரில் உள்ள பிரிவினருக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது. முஸ்லிம் பட்டதாரிகள் பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.

பல மதங்களைச் சேர்ந்த தலித்துக்க ளோடு ஒப்பிடுகையில், நகர்ப்புறங் களில் உள்ள 47 சதவிகித தலித் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்  உள்ளனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களில் உள்ள தலித்துக்களை விட  இது அதிகம். கிராமங்களில், 40 சத விகித தலித் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். எனவே தலித் முஸ்லிம்களுக்கும் எஸ்.சி.  அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விடவேண்டும்.  இவ்வாறு ஜமியத் உலாமா-இ-ஹிந்த் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய தலித்துகளை பட்டியல் வகுப்பினராக (Scheduled Caste) அங்கீகரித்து அவர்களுக்கும் சட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி கள் எஸ்.கே. கவுல், அபய் எஸ்.ஓகா  மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்து  வருகிறது.

நவம்பர் மாதத் துவக்கத்தில் இம்மனு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய பாஜக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. - இந்து மதத்தில் இருப்பதைபோல் இஸ்லாமிய - கிறிஸ்தவ மதங்களில் சாதியத் தீண்டாமை இல்லை என்பதால், மதம் மாறிய தலித்துகளை பட்டியல் வகுப்பினராக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் ஒன்றிய பாஜக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே, ஜமியத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பு, தலித் முஸ்லிம்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. முஸ்லிம் மதத்திற்குள் சாதி யமைப்பு உள்ளதை அங்கீகரிக்கும் முதல் இஸ்லாமிய அமைப்பாக ஜமியத் உலாமா-இ-ஹிந்த்-தின் இந்த மனு அமைந்துள்ளது.

;