court

img

பிளஸ் 1 தேர்வை நேரடியாக நடத்த உச்சநீதிமன்றத்தை அணுகியது கேரள அரசு.....

புதுதில்லி';
பிளஸ் 1 தேர்வை நேரடியாக நடத்த அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தை கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆன்லைன் பள்ளித் தேர்வுமுறை கேரளத்தில் இல்லை என்றும் நேரடி தேர்வுக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் அரசு அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் மாதம், கேரளத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தி மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பொறியியல் தேர்வுகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. மொபைல் போன் கூட கிடைக்காத மாணவர்கள் இருப்பதாகவும், அவர்களை ஆன்லைனில் தேர்வு செய்ய முடிவு செய்தால், அவர்களால் தேர்வு எழுத முடியாது என்றும் அரசின் பிரமாணப் பத்திரம்கூறுகிறது. மாணவர்கள் பிளஸ் 1 தேர்வை எழுதினால் மட்டுமே பிளஸ் 2 படிப்பை வெற்றிகரமாக முடிக்க முடியும். எனவே, நேரடி எழுத்துத் தேர்வை அனுமதிக்க வேண்டும் என்று அரசு கோரியது. கோவிட் பாதித்த பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்புவசதிகள் செய்து தரப்படும் என்றும்  உச்சநீதிமன்றத்தில் அரசு உறுதியளித்துள்ளது.தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வேறெங்கும் கொரோனா காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே மாதங்கள்) தேர்வுகள் நடைபெறவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் ஆல்பாஸ் அல்லது முந்தைய தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுத்தேர்வுக்குரிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஆனால் கேரளத்தில் மட்டும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகள் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பாக நடத்தி முடிக்கப்பட்டன. ஆனால் நாடு முழுவதும் கோவிட் இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் பொதுத் தேர்வுகள் நடத்த மத்திய அரசு தடைவிதித்தது. இந்நிலையில் ப்ளஸ் 1 தேர்வையும் நேரடியாக நடத்தி மாணவ மாணவியரை பிளஸ் 2 வகுப்புகளுக்கு அனுப்பும் முயற்சியை கேரள கல்வித்துறை மேற்கொண்டுள் ளது. 

;