court

img

அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்தியாவில் வாழும் அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது. 

பெண்கள் மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு  செய்யும் உரிமை குறித்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, " பெண்கள் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால் மருத்துவமுறையில் செய்து கொள்ள உரிமை உண்டு. கருக்கலைப்பு சட்ட விரோதமாகாது. இந்த உரிமையை மருத்துவ கருவுறுதல் சட்டம் 1971 அனுமதிக்கிறது.  கர்ப்பம் தரித்து 24 வாரங்கள் வரை பெண்கள் மருத்துவ முறையில் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உரிமை உண்டு என்று உச்ச நிதிமன்றம் தெரிவித்துள்ளது. கருக்கலைப்பில் திருமணமான பெண்கள் அல்லது திருமணமாகாப் பெண்கள் என்ற பாகுபாடு இல்லை. அனைத்து பெண்களும் எந்த சூழலிலும் மருத்துவமுறையில் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உரிமை உண்டு. சமயங்களில் திருமண உறவில் பெண்கள் கட்டாய உறவினால் கர்ப்பம் தரிக்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களை கர்ப்பத்திலிருந்து காப்பாற்ற இந்த சட்டம் அனுமதிக்கிறது. எனவே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பிழைத்து வரும் பெண்களை போலவே திருமணமாகி வலுக்கட்டாயமாக கர்ப்பம் தரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;