court

img

4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து... தீவிரமான பிரச்சனை: உச்சநீதிமன்றம்.....

புதுதில்லி:
நாட்டின் ஏழை மக்கள், மற்றும் பழங்குடியினரின் மூன்று கோடி ரேஷன் கார்டுகள் உட்பட 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுவது மிகவும் ஆழமான பிரச்சனை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

நாட்டில் பழங்குடியினர் மற்றும் ஏழைகள் ஆதார் கார்டு இல்லாததாலும், அவர்களால் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய முடியாததாலும் அவர்களின் ரேஷன் அட்டைகள் சுமார் மூன்று கோடி ரத்து செய்யப்படுவதால் நாட்டில் பட்டினிச் சாவுகள் ஏற்படும் என்றும் எனவே மத்திய அரசின் இம்முடிவை ரத்து செய்திட வேண்டும் என்றும் மூத்த வழக்குரைஞர் கோலின் கோன்சால்வேஸ் பிரதிநிதித்துவப்படுத்தி கோய்லி தேவி என்பவரால் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி சரத் ஏ.போப்டே தலைமையிலான அமர்வாயம் மேற்கண்டவாறு கருத்தை வெளியிட்டது.

மத்திய அரசின் கூற்றுப்படியே ரேஷன் கார்டுகளில் ஆதார் மற்றும் பயோமெட்ரிக் சான்றளிப்பை நிறுவ முடியாததன் காரணமாக சுமார் நான்கு கோடி ரேஷன் அட்டை ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.இதற்கு மிகவும் கேசுவலாகப் பதிலளித்துள்ள மத்திய அரசு, இவை அனைத்தும் போலி கார்டுகள் என்று விளக்கமளித்திருக்கிறது. ஆனால் உண்மையான காரணங்கள், பழங்குடியினரின் கை ரேகைகள் மற்றும் கருவிழிகள் அரசின் தொழில்நுட்ப சாதனங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றும், பலரிடம் ஆதார் அட்டைகள் இல்லை என்பதும் நாட்டில் இன்னமும் பல பகுதிகளுக்கு இணைய வசதி சென்றடையவில்லை என்பதுமேயாகும் என்று மனுதாரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

;