சென்னை:
தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தித் தரப்படும் என தலைமை தேர்தல் ஆணைய செயலர்உமேஷ் சின்கா அண்மையில் அறிவித்தார். விருப்பப்படும் முதியோர் கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.
இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் தபால் வாக்குபதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர் களின் பட்டியலை அரசியல் கட்சி களுக்கும், வேட்பாளர்களுக்கும் மார்ச் 29ஆம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும் என்று தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.