பிரபல கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மோடி ஆட்சிக்கு வந்த பின் நாட்டின் முன்னணி நிறுவனம் போல வளர்ந்தது. இயற்கையாக செய்யப்படுகிறது என்று கூறி தேன், டூத்பேஸ்ட், சோப்புகள், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வரும் பதஞ்சலி நிறுவனம், அலோ பதி மருத்துவம் கூட தீர்க்க முடியாத தீராத நோய்களை பதஞ்சலி பொருட்கள் தீர்ப்பதாக விளம்பரங்களை வெளியிட் டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியது. இதுதொடர்பான வழக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில்,”அலோபதிக்கு எதி ராக எந்தவொரு தவறான விளம்பரங் களையும் இனி வெளியிட வேண்டாம். மீறி விளம்பரங்கள் வெளியிடப்பட்டால் பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக கடுமை யான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்ச ரிக்கை செய்துள்ளனர்.