குஜராத் மாநிலம் கோத்ராவில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் கரசேவகர்கள் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு தீவைத்தனர். இதில் 14 குழந்தைகள் உள்பட 57 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குல்பர்கா சொசைட்டி பகுதியில்நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி கொல்லப்பட்டார். இதையடுத்து, கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணைநடத்தச் சிறப்பு விசாரணைக்குழு(எஸ்ஜடி) அமைக்கப்பட்டது.
இக்குழு 2012ல் தாக்கல் செய்த அறிக்கையில், அப்போது முதல்வராக இருந்த மோடி உள்பட 59 பேர் மீது தண்டிப்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என நற்சான்றிதழ் வழங்கியது. இதை ஏற்க இயலாது என்றும் மறு ஆய்வு செய்யக்கோரியும் அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், குஜராத் உயர் நீதிமன்றத்திலும், மறைந்த எம்பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகுஅவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கில் மனுதாரர் ஜாகியா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடி வருகிறார். 2018ஆம் ஆண்டில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் பல முறை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, 2021 மார்ச் 16ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக மீண்டும் இந்த மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் அமர்வு, ‘மராத்தா இடஒதுக்கீடுவழக்கு விசாரணையில் அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் ஈடுபட்டிருப்பதால், 2021 ஏப்ரல் 13ஆம் தேதி உறுதியாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். இதற்குமேல் ஒத்திவைக்கப்படாது, அதற்கான கோரிக்கைகளும் ஏற்கப்படாது,’ என்று உறுதியாக தெரிவித்தது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வில் 13.4.2021 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனுதாரர் தரப்பில் இந்த மனுவை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க கோரி கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது,’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்படிஎனில் முந்தைய உறுதிமொழி என்னவாயிற்று? நமது நாடு ஒரு ஜனநாயக நாடாகும். இதன் அடிப்படை கோட்பாடாக இருப்பதுமக்கள் நலன்தான் பிரதமராக இருந்தாலும், முதல்வராக இருந்தாலும், உயர்அதிகாரிகளாக இருந்தாலும், ஜனநாயகத்தில் இவர்கள் எல்லோருமே சேவகர்கள்தான். மக்களின் கள் என்பதால் நாம் தவறாக செயல்பட்டால் நம்மை தண்டிக்கவும் சட்டத்தில்நிச்சயம் இடம் உண்டு. நீதி பரிபாலனம்மக்களுக்காகத்தான் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் நீதிமன்றம் நியாயம் வழங்க வேண்டும். வழக்கைஒத்திப் போடுவதாலோ இழுத்தடிப்பதாலோ எவரையும் காப்பாற்ற நினைப்பது சட்டத்தின் கோட்பாடு அல்ல.
தொகுப்பாளர் : ஆரூரான்