பெங்களூரு,ஜனவரி.29- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்களை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த 1996ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் போது இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2004இல் சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டன.
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளையும் 1562 ஏக்கர் நிலங்களின் பத்திரங்களையும் வரும் பிப்ரவரி 14, 15ஆம் தேதி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும், ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.