court

img

நீதிபதிக்கு கட்டாய ஓய்வு - உயர்நீதிமன்றம் உத்தரவு

மனைவி வாங்கிய சொத்துக்கள் குறித்த தகவலை உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்காத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனைவி வாங்கிய சொத்துக்கள் குறித்த தகவலை உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்காததால், நீதிபதி குணசேகர் கடந்த 2020ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக குற்றக் குறிப்பாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், 60 வயது வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என முடிவு செய்த சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய குழு, அவருக்கு கட்டாய ஓய்வு வழங்க ஒப்புதல் அளித்தது. தமிழ்நாடு அரசும் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
கட்டாய ஓய்வை எதிர்த்து மாவட்ட நீதிபதி குணசேகர் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். நீதித்துறை அதிகாரியை, அரசு ஊழியர்களைப் போல கருத முடியாது. நீதித்துறை அதிகாரிகள் உச்சபட்ச நேர்மையை கொண்டிருக்க வேண்டும். அதனால் உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.