பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 11) தீர்ப்பளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கெபிராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், கெபிராஜ் பாலியல் இந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை விவரம் நாளை (ஆகஸ்ட் 12) அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.