court

img

காதலிப்பது தனி மனித சுதந்திரம்.... உ.பி. பாஜக அரசு அதைத் தடுத்துவிட முடியாது...

அலகாபாத்:
மதம்கடந்த காதல் திருமணங்களைத் தடுக்கும் வகையில், மதம்மாற்றத் தடை அவசரச் சட்டம் (Prohibition of Unlawful Conversion of Religion Ordinance, 2020)என்ற ஒன்றை உத்தரப்பிரதேச பாஜக அரசு அண்மையில் கொண்டு வந்தது.

கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாகத் திருமணத்துக்காக மதம் மாறுதல் ஆகியவற்றில்ஈடுபடுவோருக்கு அதிக பட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். திருமணத்துக்காக மதம் மாறுவது சட்டப்படி ஏற்கப்படாது. மேலும், இவ்வாறு நடத்தப் படும் திருமணம் சட்டப்படி செல்லாது.  கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்படும்.சிறுமிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரைசிறையும், ரூ. 25,000 அபராதமும் விதிக்கப் பட்டு, ஜாமீனில் வெளி வரமுடியாத குற்றமாகவும் கருதப்படும் என்று உ.பி. பாஜக அரசு, அவசரச் சட்டத்தில் குறிப்பிட்டு இருந்தது.

அத்துடன் சட்டம் கொண்டுவந்த ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, 8 பேர் மீது வழக்கும் பதிவு செய்தது.இவர்களில் இந்துப் பெண்ணை காதலித்து மணம் முடித்ததாக கூறப்படும் நதீம் என்பவரும் ஒருவர் ஆவார். இந்துப்பெண்ணை மதம் மாற்றும் நோக்கத்திற்காகவே அவருடன் நதீம் காதலை வளர்த்து கொண்டதாகவும், உறவை வளர்த்துக் கொண்டதாகவும் காவல்துறை எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த நதீம், தன்மீதான வழக்கு ஒன்றில் நிலுவைத்தொகை பாக்கி இருப்பதால், இப்படி ஒரு புகார்வேண்டுமென்றே தன்மீது அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப் போது, நீதிபதிகள் ‘லவ் ஜிகாத்’ சட்டத்தின் கீழ் முஸ்லிம் இளைஞர் நதீமை கைது செய்வதற்கு அதிரடியாக தடை விதித்தனர்.“பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்,தனது நல்வாழ்வைப் புரிந்துகொள்ளும் ஒரு வயதை அடைந்தவர். காதலிப்பது தனிமனித சுதந்திரம்.. அதை தடுக்க முடியாது.. அதேபோல, மதம் மாற்றுவதற்காகவே இந்துப் பெண்ணுடன் உறவை நதீம் நீடித்தார் என்று சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மத்திய அரசு சிறப்பு திருமண சட்டத்தை உருவாக்கியபின், மாநில அரசுஅதை வேறொன்றாக மாற்றி சட்டமியற்ற முடியாது. அதனால் நதீமை கைது செய்ய முடியாது” என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.“யாராக இருந்தாலும் ஒரு ஆணோ, பெண்ணோ அவர்கள் விரும்பும் நபரை சாதி, மத பேதங்களைக் கடந்து திருமணம் செய்து கொள்வதற்கான உரிமை இந்திய அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள ஒரு அடிப்படை உரிமை” என்று கர்நாடக உயர்நீதிமன்றமும் அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

;