court

img

இந்து மதம் குறுகிய எண்ணம் கொண்டதாக ஒருபோதும் இருந்தது இல்லை... பிற மதத்தவர்கள் இந்துமத நிறுவனங்களில் பணிபுரிய தடையில்லை.. . கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

பெங்களூரு:
கர்நாடகத்தில், இந்துமத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளில், இந்துக்கள் அல்லாதவர்கள் ஆணையர்களாகவோ, ஊழியர்களாகவோ பணியாற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரிய ‘ரிட்’ மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

“இந்துமதம் ஒருபோதும் குறுகியது அல்ல. மேலும், அது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களையும் கொண்டிருக்கவில்லை” என்று தலைமை நீதிபதி அபய்எஸ் ஓகா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.கர்நாடக இந்து மத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைச் சட்டத்தின் (KarnatakaHindu Religious Institutions and Charitable Endowments Act - HRICE)பிரிவு 7-ஐ கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், இந்து மதத்தை மதிக்காதஎந்தவொரு நபரும் இந்தச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் ஆணையாளர் அலுவலகத்தில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ‘ரிட்’ (Writ Petitions) மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டிருந்தன.மஹாலிங்கேஸ்வரா ஏற்பாடு செய்தவருடாந்திர திருவிழாவின் அழைப்பிதழில்,மங்களூரு இந்து மத நிறுவனங்கள் மற்றும்அறக்கட்டளைத் துறையில், துணை ஆணையராகப் பணியாற்றி வந்த ஏ.பி. இப்ராஹிமின் பெயரை அச்சிடுவது தொடர்பாக என்.பி. அம்ருதேஷ் என்பவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இதேபோல, எச்ஆர்ஐசிஇ (HRICE)சட்டத்தின் கீழ் ஆணையர் அலுவலகத்தில்முகமது தேசவ் அலிகான் என்பவர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து, ‘பாரத புனருத்தனா அறக்கட்டளை’ என்ற அமைப்பும் மனுத் தாக்கல் செய்திருந்தது.இந்த இரு மனுக்களும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அபய்எஸ். ஓகா மற்றும் நீதிபதி எஸ். விஸ்வஜித்ஷெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்புதிங்களன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, துணை ஆணையராகப் பணியாற்றி வரும் ஏ.பி. இப்ராகிம் கோயிலுக்குள் நுழைந்து, திருவிழா ஏற்பாடுகளைசெய்வதற்குத் தடுக்க வேண்டும் என்ற அம்ருதேஷ் தாக்கல் செய்த மனு தங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்தநீதிபதிகள், “வேற்று மதத்தைச் சேர்ந்ததுணை ஆணையர் திருவிழா ஏற்பாடு செய்தால், வானம் இடிந்து விழுந்து விடாது?” என்றும் காட்டமாக குறிப்பிட்டனர்.“இந்து மதம் ஒருபோதும் குறுகியது அல்ல. இந்து மதம் ஒருபோதும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களையும் கொண்டிருக்கவில்லை” என்றும் “நாடு முழுவதும் செல்லுங்கள், பெரிய இந்து பண்டிகைகளில், இந்து மதத்தவர் அல்லாத அரசுஅதிகாரிகள், கோயில் நிர்வாகத்திற்கு தீவிரமாக உதவி செய்திருப்பதைப் பார்ப்பீர்கள்” என்றும் தெரிவித்த நீதிபதிகள், இதனைத் தடுக்கக் கோரும், மனுக்களை பொதுநல வழக்குகளாக எப்படி ஏற்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினர்.குறிப்பாக, தலைமை நீதிபதி ஓகா பேசுகையில், “அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒருபோதும் இதுபோன்ற மனுக்கள் நீதிமன்றத்திற்கு வருவதை அனுமதிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் என்று ஒன்று உள்ளது, அரசியலமைப்புத் தத்துவம் என்று ஒன்று உள்ளது. அதற்கு எதிரான ஒரு மனுவை நீதிமன்றம் வரவேற்காது. அவ்வாறு ஏற்பது, நம்மை 100 ஆண்டுகளுக்கு பின்னால் அழைத்துச் சென்று விடும்” என்று குறிப்பிட்டார்.

இறுதியாக இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள்:“கர்நாடக இந்து மத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு7 ஆனது, ஆணையாளர், துணை ஆணையாளர் அல்லது உதவி ஆணையர் அலுவலகங்களில் பணிபுரிய ஒரு அதிகாரி அல்லதுஊழியரை நியமிக்க பொதுவாக எந்தத் தடையும் விதிக்கவில்லை. மாறாக, ஆணையாளர், துணை ஆணையாளர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட ஊழியர்கள் ஒவ்வொருவரும் 1997-ஆம் ஆண்டு கர்நாடக இந்துமத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைச் சட்டத்தில் கூறப்பட்ட நோக்கங்களை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட அதிகாரி அல்லது பணியாளர் என்ற அடிப்படையில், இந்துமதத்தை மதிப்பவராக இருக்க வேண்டும்என்று மட்டுமே கட்டுப்பாடு விதித்துள்ளது.ஆணையாளர்கள், ஊழியர்கள் நியமனம் என்பது, சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக செய்யப்படுவது இல்லை. அலுவலகத்தின் தேவையை முன்னிறுத்தியே நியமிக்கப்படுகின்றனர். ஆணையாளர் அலுவலகத்தில் கணினி நிரல்கள் அல்லது தரவு உள்ளீட்டை உருவாக்க கணினி புரோகிராமர்கள், தரவுநுழைவு ஆப்பரேட்டர்கள் நியமிக்கப்படலாம். தூய்மைப் பணிக்கு குரூப் ‘டி’ ஊழியர்கள் நியமிக்கப்படலாம். இவர்கள் அனைவருமே அலுவலகத்தின் தேவையைகருத்தில்கொண்டே நியமிக்கப்படுகிறார் கள். இவர்கள் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல. எனவே பிரிவு 7- இன் கீழ் தடைபொருந்துமா? என்பதைத் தீர்மானிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளின் தன்மையை மட்டுமே கருத்தில் கொள்ள முடியும்” என்று கூறி, மதவெறி அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

;