court

img

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை...   மத்திய அரசு கைவிரிப்பு...

மும்பை:
வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், படுக்கையில் இருக்கும் நோயாளிகள், இரு சக்கர நாற்காலியில் இருப்போருக்கு அவரவர் வீடுகளுக்குச் சென்று கொரோனா தடுப்பூசிப் போட உத்தரவிடக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது.இந்த மனு மீது புதனன்று நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தடுப்பூசி மருந்துகள் வைக்கப்பட்டு இருக்கும் பெட்டகங்களை  வீடு வீடாக எடுத்துச் செல்வது சிக்கல்களை ஏற்படுத்தும். நெடுந்தொலைவுக்கு எடுத்துச் சென்றால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும். எனவே வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட முடியாது என்று தெரிவித்தார். இதனைபதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

;