cinema

img

ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு மேலும் 4 சர்வதேச விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ், பிப்.25- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் கிரிடிக்ஸ் அசோசி யேஷன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆர்ஆர்ஆர் திரைப்படம், சிறந்த சர்வதேச திரைப் படம், சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம், சிறந்த ஒரிஜினல் பாடல் (நாட்டு நாட்டு), சிறந்த சண்டை காட்சிகள் ஆகியவற்றுக் கான விருதுகளை வென்றுள்ளது. சிறந்த சண்டை காட்சிகளுக்கான விருதை பெற மேடையேறிய ராஜ மௌலி ஆற்றிய உரையில், இவ் விருதை இந்தியாவுக்கு அர்ப்பணிப்ப தாக கூறிய அவர் சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு  நன்றி தெரிவித்தார்.  “இந்த அங்கீ ாரம் எனக்கும் எனது படத்துக்கும் மட்டு மல்ல, இந்தியத் திரையுலகத்துக்கும் மிகப்பெரிய கௌரவம்”  என்றார். சிறந்த சர்வதேச திரைப்படத் திற்கான விருதை நடிகர் ராம் சரணுடன் ராஜமௌலி பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய ராஜமௌலி, “எங்க ளாலும் சிறந்த சர்வதேச திரைப் படத்தை உருவாக்க முடியும் என்பதை நான் மட்டுமல்ல எனது சக இயக்கு நர்களும் நம்புவதற்கு இந்த விருது உதவும்” என்றார். சிறந்த இசைக்காக வழங்கப்படும் சர்வதேச விருதான ‘கோல்டன் குளோப்’ விருதை ‘நாட்டு நாட்டு’பாட லுக்காக ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி கடந்த ஜனவரி மாதம் பெற்றார்.   சிறந்த பாட லுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.