cinema

img

எட்டு மணி நேர விசாரணைக்கு பிறகு ஆயிஷா சுல்தானா விடுவிப்பு...

கொச்சி;
லட்சத்தீவு பாஜகவினர் அளித்த புகாரில் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளான ஆயிஷா சுல்தானா என்கிற திரைப்பட பெண் கலைஞரை எட்டு மணி நேரம் விசாரித்தகாவல்துறையினர் அவரை விடுவித்தனர்.\

புதனன்று காலை 10.30 மணியளவில் கவரட்டி காவல் தலைமையகத்தில் விசாரணையில் கலந்து கொண்ட ஆயிஷா மாலை 6.30 மணியளவில் விடுவிக்கப்பட்டார். இரண்டாவது முறையாக புதன்கிழமை விசாரிக்கப்பட்ட பின்னர் ஆயிஷா கைதுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மூத்த காவல் அதிகாரிகள் தகவல்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் வாக்கு மூலம் அளிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா முதல்முறையாக காவல்துறை முன் ஆஜரானார். தேசத்துரோக வழக்கில் முன்கூட்டியே ஜாமீன் கோரிய ஆயிஷா, கைது செய்யப்பட்டால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஆயிஷாவை சுமார் மூன்றுமணி நேரம் விசாரித்தனர். பின்னர் அவரை லட்சத்தீவில் தங்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

 காவல்துறையின் அறிவுறுத்தலின் படி கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர் புதன்கிழமை காவல் தலைமையகத்தில் ஆஜரானார். தனிமைப்படுத்தலை மீறியதற்காக ஆயிஷாவுக்கு செவ்வாயன்று ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கொச்சியிலிருந்து கவரட்டிக்கு வந்தால் கோவிட் நெறிமுறைகளை மீறி பொது இடங்களுக்குச் சென்றதாக அதில் கூறப்பட்டிருந்தது. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற ஆயிஷா உயிரி ஆயுதம்என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து பாஜகவின் லட்சத்தீவு தலைவர் சி அப்துல் காதிர் ஹாஜிகவரட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

;