cinema

img

12 வயது மாணவி இயக்கிய “குண்டான் சட்டி” அனிமேஷன் திரைப்படம்

கும்பகோணம், பிப்.13- கும்பகோணம் கார்த்தி வித்யாலயா சர்வதேச பள்ளியில் பல்வேறு கிராமிய விளையாட்டு முதல் நவீன விளையாட்டு வரை தொடர்ந்து கல்வியோடு பயிற்சியும் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர்.  இந்நிலையில் அப்பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் மாணவி பி.கே.அகஸ்தி  (12) ‘‘குண்டான் சட்டி’’ என்ற அனி மேஷன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதன் கதையையும் அவரே எழுதியுள்ளார். அரங்கன் சின்னத்தம்பி திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ள இப்படத்தை டாக்டர் எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரித்துள்ளார். எம்.எஸ்.அமர்கித் இசை அமைத்துள்ளார். அடுத்த மாதம் படம் திரைக்கு வரவுள்ளது.