cinema

img

நம் அடையாளங்களைப் பறிக்கும் செயல்... - சோழ. நாகராஜன்

நம் அடையாளங்களைப் பறிக்கும் செயல்... விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கலைத்திருவிழாவில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் “திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்பவை நம் அடையாளங்களைப் பறிக்கும் செயல்” - என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:  “அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாகத்  தவறு எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக விசிக தலைவர் திருமாவளவனை நேரில் தொடர்புகொண்டு இதுகுறித்துக் கேட்டேன். அதற்கு திருமாவளவன், தனிமனிதனால் சமூகத்திற்குத் தீர்வு கிடைக்கும் என சினிமாவில் சொல்லாதீர்கள். மக்களை அமைப்பாகத் திரள வழி செய்யுங்கள் என்றார். கலை என்பதும் ஒரு அரசியல்தான். நாம் தெரிந்தோ தெரி யாமலோ அரசியலுக்குள்தான் இருக்கிறோம் என்றார்  அவர். திராவிட இயக்கம் சினிமாவைக் கையில் எடுத்ததால்தான் இங்கே ஒரு மதச்சார்பற்ற சூழல் நிலவுகிறது. சினிமாவை அரசியல்மயப்படுத்த வேண்டி யது முக்கியம். அந்தக் கலையை நாம் சரியாகக் கையாள வேண்டும் என்றார் வெற்றிமாறன். 

;