cinema

img

நாளை ஓடிடி-யில் வெளியாகிறது ‘உடன்பிறப்பே’

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் நாளை(அக்-14) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

ஜோதிகா நடிப்பில் வெளியான ’36 வயதினிலே, காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள் போன்ற படங்களைத் தயாரித்த 2டி நிறுவனம், இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சசிகுமாரை மையமாக வைத்து உருவான ‘உடன்பிறப்பே’ திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறது.

முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் அண்ணன், தங்கை பாசத்தை வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஜோதிகா, சமுத்திரகனி, கலை, சூரி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இமான் இசையமைத்திருக்கிறார்.

முன்னதாக, இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், நாளை(அக்.14) அமேசானில் வெளியாகிறது.

;