cinema

img

சாய் பல்லவி மீது புகார்...

சினிமா நட்சத்திரம் சாய்பல்லவி அண்மையில் தான் நடித்து வரவிருக்கிற விரத பர்வம் படம் தொடர்பான நேர்காணல்கள் கொடுத்துவந்தார்.  அதில் ஒன்றில் நான் நடுநிலையான சூழலில் வளர்ந்து வந்தவள். தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதாகக் காட்டினார்கள். கொரோனா பொது முடக்க காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.  மாட்டிறைச்சி கொண்டுசென்ற ஒருவரை அவர் முஸ்லிம் என்று சந்தேகித்து அடித்தே கொன்றார்கள். அதற்குமுன் அவரை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதற்கும் காஷ்மீரில் நடந்ததாகச் சொல்லப்படுவதற்கும் என்ன வேறுபாடு உள்ளது? இரண்டுமே வன்முறைதான் என்று கூறியிருந்தார். சாய்பல்லவியின் இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் அவர்மீது ஹைதராபாத் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சங்பரிவாரத்தின் ஒரு பிரிவான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர்தான் ஹைதராபாத்தின் சுல்தான் பஜார் காவல்நிலையத்தில் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். அத்துடன் விரத பர்வம் படத்தின் இயக்குநர் வேணு உடுகுலாவின் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

;