cinema

img

ஹேக் செய்யப்பட்டது கார்த்தியின் பேஸ்புக் பக்கம்

நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

சமீபகாலமாக பிரபலங்களின் சமூக வலை தள பக்கங்கள் அதிக அளவில் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் சிவகுமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியுமான பிரபல நடிகர் கார்த்திக்கின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சற்று முன் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பேஸ்புக் பக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இது சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.