cinema

img

தமிழ்ப் படத்தில் பிரெஞ்சு நடிகை

வெங்கடேஷ் குமார் ஜி திரைக்கதை, வச னம் எழுதி இயக்கியுள்ள படம் ‘எ ஹோம் அவே ஃப்ரம் ஹோம்’. இது சஹாரா ஏஷியா புரொடக்சன்ஸ் சார்பாக உமா பாலு கதை எழுதித் தயாரித்துள்ள படம். பிரபு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு. எழில் துரை இசை அமைத்துள்ளார். இத் திரைப்படத்தில் பிரெஞ்சு நடிகை மனிஷா டெய்ட் நடித்துள்ளார். அவருடன் அனீஷ், நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.  இத் திரைப்படம் குறித்து இயக்குநர் இவ்வாறு கூறியுள்ளார்: “ஆசிய அளவில் நடந்த சிறுகதைப் போட்டிக்குத் தயாரிப்பாளர் உமா பாலு கதை ஒன்றை எழுதி அனுப்பினார். உண்மைச் சம்ப வத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கதை தேர்வாகி, விருது பெற்றது. இந்தக் கதையைத் திரைப்படமாக்கலாம் என்று கருதப்பட்டது. நான்  திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன்.  ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவி  ஒருவர் ஆராய்ச்சிக்காக தென்னிந்தியப் பழங்குடி கிராமம் ஒன்றுக்கு வருகிறார். பலரையும் சந்திக் கிறார். அதன் காரணமாக அவரது வாழ்வில்  என்னவிதமான மாற்றங்கள் உண்டாகின்றன என்பதே கதை.  இதில் வயநாட்டில் இருக்கிற பழங்குடி மக்க ளை  நடிக்க வைத்தோம். தாய்மையைச் சொல்லும் படமான இது பல்வேறு விழாக்களிலும் விருது களைப் பெற்றுள்ளது. இதில் ஜெர்மனியப் பெண்ணாக நடித்துள்ள பிரெஞ்சு நடிகை மனிஷா  டெய்ட் ஏற்கெனவே ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது!” - என்றார்.