cinema

img

உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து...

பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், தமிழக முதல்வரின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எம்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில் அவரை இசைஞானி இளையராஜா எம்.பி. வாழ்த்தியுள்ளார். தனது ட்வீட்டர் பக்கத்தில் இளையராஜா கூறியுள்ளது இது: அமைச்சர் உதயநிதியை வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முக்கியமாக ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று வள்ளுவன் சொன்னதைப்போல அம்மாவுக்கு நீங்கள் பதவி ஏற்பது சந்தோசமாக இருக்கும்.  இந்த அமைச்சர் பதவியை பயன்படுத்தி நல்ல முறையில் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். மக்களிடம் நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இளையராஜாவும் உதயநிதியும் ஒரே திரைத்துறைப் பிரமுகர்கள் என்பதால் இந்த வாழ்த்து அழுத்தம்பெறுவதாகக் கூறப்படுகிறது. உதயநிதியை கமல்ஹாசனும் வாழ்த்தியுள்ளார். தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் வாழ்த்துச் செய்தியில் மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். கமல் தயாரிப்பில் உதயநிதி நடிப்பதாக இருந்த படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். மாமன்னன் படத்திற்குப்பிறகு நடிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.    இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்புத்துறை ஆகியன அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறைகளாகும்.