cinema

img

கொரோனா குமார் ஆன பாலகுமாரு...

சிலம்பரசன் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் பெயரே பெரும் பேச்சுக்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது. விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி உள்ளிட்டவர்கள் நடித்த இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல்தான் சிலம்பரசனை நாயகனாக வைத்து அடுத்த படத்தை எடுக்கவிருக்கிறார். பாலகுமாராவின் ஒரு முக்கிய பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்துத்தான் இந்தப் புதிய படம் அமையப் போகிறதாம். இதன் பெயர்தான் இப்போது விநோதமாகப் பார்க்கப்படுகிறது. படத்தின் பெயர் என்ன தெரியுமா? கொரோனா குமார். இதெப்படி இருக்கு?

;