cinema

img

ஏ.ஆர். ரஹ்மான்... அது என் கதையல்ல, நான் எழுதிய கதை...


சென்ற மாதம் திரையரங்குகளில் வெளியானபோதி லும் கொரோனா ஊரடங்கு காரணமாக ரசிகர்களின் கவனிப்பைப் பெறாத நிலையில் மீண்டும் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் சென்ற வாரம் வெளியாகியுள்ள படம்தான் ‘99 சாங்ஸ்’. இதன் கதையை ஏ.ஆர்.ரஹ்மான்எழுதியுள்ளார். அவரே இசையமைத்து, தயாரித்துள்ள இந்தப் படத்தில் இஹான் பட், எடில்சி வர்க்கீஸ் நடித்துள்ளனர். இயக்கம்விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி. இந்தப் படம் பற்றி பெருமை யோடு சில கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார் ரஹ்மான்: 

இசையில் கரைந்துபோகிற ஒரு குடும்பத்து இளைஞனொருவன் அந்த இசையாலேயே புகழ்பெற்று உயர்வதானதொரு கதைதான் இந்த 99 சாங்ஸ். இந்தப் படத்தின் டீசரைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இது என்னுடைய சொந்த வாழ்க்கைக்கதை என்று பதிவிடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், இது நான் எழுதிய கதைதான். என் வாழ்க்கைக் கதையல்ல. இதை எழுதி முடிக்க எனக்கு நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இதன் நாயகனைத் தேர்வு செய்ய 750 பேர்வரை ஆடிசன் நடத்திப் பரிசீலித்தோம். நாங்கள் தேர்வு செய்த இஹான் பட்டுக்கு ஒரு வருடம் இசைப் பயிற்சியளித்து அவர் அதனைக் கற்க வைத்தோம். அதன் பிறகே அவரை நடிக்க வைத்தோம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகியுள்ளது இந்த 99 சாங்ஸ். இசையையும் காதலையும் நம் சினிமாக்களில் சொல்வதொன்றும் புதிதல்லதான். ஆனாலும் இந்தப் படம் என்ன வகைகளில் புதுமை செய்கிறதென்பதையும் பார்க்கலாம்.

;