cinema

img

சூரரைப்போற்று படத்துக்கு 5 விருது

சென்னை, ஜூலை 22 - 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான திரைப்பட விருது கள் வெள்ளிக்கிழமையன்று அறி விக்கப்பட்டன. திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்பட்ட 68-வது தேசிய திரைப்பட விருதுகளை ஜூரி உறுப்பினரும், ஒளிப்பதிவாளருமான தரம் குலாத்தி அறிவித்தார்.  இந்த விருதுப் பட்டியலில் உலக ளவில் ‘ஹிட்’ அடித்த சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது.  சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பால முரளி), சிறந்த பின்னணி இசை (ஜி.வி. பிரகாஷ் குமார்), சிறந்த திரைக்கதை (சுதா கொங்காரா உள்ளிட்ட 5 பேர்  கொண்ட குழு) என 5 தேசிய விருது களை ‘சூரரைப் போற்று’ திரைப்படம் குவித்துள்ளது. 

‘தன்ஹாஜி’ படத்தில் நடித்த அஜய் தேவ்கன் நடிகர் சூர்யாவுடன் சிறந்த நடி கருக்கான விருதை பகிர்ந்துகொள் கிறார். இயக்குநர் வசந்த் இயக்கத்தில் உருவான மற்றொரு தமிழ்ப்படமான “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண் களும்” தமிழில் சிறந்த படமாக தேர்வாகி யுள்ளது. மேலும், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த துணை நடிகைக்கான விருது களையும் இப்படம் வென்றுள்ளது. சிறந்த துணை நடிகையாக லட்சுமி பிரியா சந்திரமௌலி அறிவிக்கப் பட்டுள்ளார்.

“மண்டேலா” படத்திற்கும் 2விருது

சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த வசனம் ஆகிய பிரிவுகளில் “மண்டேலா” படத்தை இயக்கிய மடோன்னே அஷ்வினுக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. மலையாளத்தில் “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் (அண்மையில் மறைந்த சச்சிதானந்தன்), சிறந்த துணை நடிகர் (பிஜூ மேனன்), சிறந்த பின்னணி பாடகி (நாட்டுப்புறப் பாடகி நஞ்சம்மா), சிறந்த சண்டைக் காட்சி இயக்கம் (ராஜ சேகர், மாபியா சசி, சுப்ரீம் சுந்தர்) ஆகிய நான்கு விருதுகளை வென்றுள்ளது.