அமரர் கல்கியின் காலத்தைவென்ற நாவல் பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாகி வருவது அனைவரும் அறிந்ததே. பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிவரும் நிலையில், அதன் படப்பிடிப்புத் தளத்தின் படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டதாம். விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி,பாலாஜி சக்திவேல் என்று ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிற இந்தப் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்கிறார்கள். புதுச்சேரியில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.கப்பல், குடில்கள், போர்க்கேடயங்கள் அடங்கிய கடல்புறத்துக் காட்சிகளின் அரங்கஅமைப்புகளின் ரகசியமாக இருந்தபடங்கள்தாம் எப்படியோ வெளியாகி விட்டனவாம்.