கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சத்தை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிவாரண உதவியை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார். அந்த வகையில் தற்போது நடிகர்கள், சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சத்தை நிவராண நிதியாக கேரளாவுக்கு வழங்கியுள்ளனர்.