cinema

img

நாஜி அரசு இப்போது கலைஞர்களை மிரட்டத் துவங்கி விட்டது.... நடிகை டாப்சி, அனுராக் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுக்கு தலைவர்கள் கண்டனம்....

மும்பை:
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்,நடிகை டாப்சி ஆகியோர் சமூக அக்கறையுடன் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.குடியுரிமைச் சட்டம், இந்தித் திணிப்பு, மாட்டிறைச்சி விவகாரம், ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என பல்வேறு பிரச்சனைகளிலும் மத்திய நரேந்திர மோடி அரசின் எதேச்சதிகாரத்தை கண்டிப்பவர்களாக உள்ளனர். டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், விவசாயிகளுக்கு எதிராகவும், பாஜகஅரசுக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டபோது, அதைக் கண்டித்து, “ஒரு ட்வீட் உங்கள்ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக் கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது” என்றுநடிகை டாப்சி விளாசித் தள்ளினார். கடைசியாக, பாலியல் வல்லுறவு செய்தபெண்ணை திருமணம் செய்துகொள்வதாக இருந்தால் சிறைத்தண்டனையிலிருந்து விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி எஸ்.ஏ. பாப்டே கூறியதையும் டாப்சிவிமர்சிக்கத் தயங்கவில்லை.“இதெல்லாம் ஒரு கேள்வியா? இதுதான்தண்டனையா? பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்தப்பெண் மணக்க விரும்புவாளா? அதுபற்றி அந்தப் பெண்ணின் கருத்தை கேட்க முயன்றீர்களா?” என்று டாப்சிதனது டுவிட்டர் பக்கத்தில் கொதித்தெழுந்தார்.

ஜேஎன்யு-வில் சங்-பரிவாரங்கள் நடத்திய வன்முறையைக் கண்டித்து மாணவர்கள்நடத்திய போராட்டத்தில், நேரடியாகவே கலந்துகொண்டவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இருவருமே பாலிவுட் திரையுலகினர் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றவர்கள்.இந்நிலையில்தான், நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு சொந்தமாக மும்பை மற்றும் புனேயில் இருக்கும்வீடு, அலுவலகங்கள் என 30-க்கும் மேற்பட்டஇடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். புதன்கிழமையன்று காலையில் துவங்கிய சோதனை இரவுவரை நடத்தப்பட்டுள்ளது. அனுராக் காஷ்யப் கடந்த 2011-ம் ஆண்டு‘பாந்தம் பிலிம்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் அந்நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட் டது. இந்நிலையில், ‘பாந்தம் பிலிம்ஸ்’ அதுசினிமா தயாரித்த காலத்தில் வருமான வரிஏய்ப்பு செய்ததாக கூறி, இப்போது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அனுராக் காஷ்யப் இயக்கிய ‘மன்மார்ஜியான்’ மற்றும் தற்போது இயக்கிவரும் ‘தொபாரா’ ஆகிய படங்களில் நடித்தவர் என்றவகையில் நடிகை டாப்சி-யின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்டகட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

“முதலில் அவர்கள் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்க துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி, நேர்மையான அரசியல் போட்டியாளர்கள் பற்றி அவதூறு பரப்பினர். இப்போது இந்த நாஜி அரசு சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களையும் துரத்துகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்க நடவடிக்கை” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி சாடியுள்ளார்.‘’வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வு அமைப்புடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புபவர்களின் இல்லங்களில் பாஜக வருமானவரி சோதனை நடத்துகிறது’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

;